2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நல்லூர் பிரதேச சபையின் முன்பாக ஆர்ப்பாட்டம்

George   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நல்லூர் பிரதேச சபையின் உபஅலுவலகத்தின் பொறுப்பதிகாரி து.சசிக்குமார் மீது, அலுவலகத்தில் வைத்து பொதுமகன் ஒருவர் தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நல்லூர் பிரதேச சபை தலைமை அலுவலகம் முன்பாக பணியாளர்கள் நேற்று வியாழக்கிழமை (20) ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காணிப் பிணக்கு தொடர்பில் கடந்த 18 ஆம் திகதி உபஅலுவலகத்தில் வைத்து இரு தரப்பினரை பொறுப்பதிகாரி சமரசம் செய்யும் போது, பெண்ணொருவர் மயங்கி வீழ்ந்துள்ளார். ​பொறுப்பதிகாரி பேசிய வார்த்தைகளால் தான் அவர் மயங்கி விழுந்தார் என நினைத்த, பெண்ணை அழைத்து வந்த நபர், பொறுப்பதிகாரியை அடித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு,அடித்த நபர் கைது செய்யப்பட்டு. யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் புதன்கிழமை (19) பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் “கைது செய், கைது செய், தாக்கியவரை கைது செய்” என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியபடி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X