2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

புதுக்குடியிருப்புக்கு ஜனாதிபதி விஜயம்

Niroshini   / 2016 ஜனவரி 24 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமான ஹைர்ட்ராமணி ஆடைத்தொழிற்சாலையை திறந்து வைப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதுக்குடியிருப்புக்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம்  மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் பங்குபற்றுவதற்காக வருகை தந்த வடமாகாண ஊடகவியலாளர்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பாடசாலை அதிபர்கள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என அனைவரும், அனுமதி மறுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டனர்.

புதுக்குடியிருப்புக்கு முதல் தடைவையாக விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, பொதுமக்களை சந்திக்கவில்லை எனவும் தமது பிரச்சினைகளை அவருக்கு தெரிவிக்க இருந்த சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தமுடியாது போய்விட்டதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X