2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'பொதுச்சொத்துக்களிலும் அக்கறை காட்ட வேண்டும்'

Niroshini   / 2016 ஜனவரி 31 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

நாம், நமது சொந்த சொத்துக்களில் அக்கறை காட்டுவது போல, பொதுச் சொத்துக்களும் நமது வரிப்பணத்திலேயே அரசாங்கத்தால் இங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை உணர்ந்தவர்களாக செயற்படுவதன் மூலம், வளமான நாட்டையும் எதிர்காலத்தையும் கட்டியெழுப்ப முடியும்; என வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ஸ்ரீ லங்கா டெலிகொம், தனது பைபர் ஒப்டிக் இணைப்பின் மூலம் நாடு முழுவதும் நவீன தொழில்நுட்ப சேவையை மக்களுக்கு வழங்கிவருகின்றது.

அந்தவகையில், மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் இவ்வாறான இணைப்பு இழைகள், கடந்த மழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் மண்டைக்கல்லாறு பகுதியில் ஏ-32 பிரதான சாலையில் பாரிய மரம் சரிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்டிருந்தது.

நீண்ட நாட்கள் சீர்செய்யப்படாமல் இருந்த குறித்த வேலை தொடர்பாக, உயர் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியதன் பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விரைந்து செயற்;பட்டு, அந்த பகுதியை சீர்செய்துள்ளனர்.

இதுபோல, வெள்ளம் வரும் முன்னர் அணையைக் கட்ட வேண்டும் என்னும் பழமொழிக்கு ஒப்பாக சிறு சிறு தவறுகள் ஆரம்பத்திலேயே சீர்செய்யப்படுமானால், பொதுச் சொத்துக்களை நாம் மிகவும் பயனுள்ள வகையில் நீண்ட காலம் உபயோகிக்க உதவியாக இருக்கும். அத்தோடு, அரச சொத்துக்களும் பாதுகாக்கப்படும் என்றார்.

மேலும், இதே போன்று ஏ-32 பிரதான சாலையின் இந்த இணைப்புக்கள்  பல இடங்களிலும் பராமரிப்பின்றி காணப்படுகின்றது. எனவே இதனையும் விரைவாக சீர்செய்யுமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்.

இந்த இணைப்பை, மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் வரை ஒரு மேற்ப்பார்வை செய்து, சீர்செய்து கொள்ள வேண்டும். பொதுச்சொத்துக்கள் தொடர்பான விடயங்களில் அதிகாரிகள் மாத்திரமல்லாது பொதுமக்களும் கண்காணித்து, பிழைகள் வரும்போது ஆரம்பத்திலேயே சீர்செய்துகொள்வதன் மூலம், பாரிய சேதங்களை தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X