2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'புத்தரின் பூர்வீகமே இந்து மதம்தானே?'

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

'கலப்புத் திருமணம் பற்றியும் பௌத்தர்கள் இந்துக் கடவுளை வணங்குகின்றனர் என்றும், கடமைகளைப் பொறுப்பேற்ற உடனேயே கருத்துரைத்த வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, முதலில் இந்து சமய வரலாற்றை படிக்க வேண்டும்' என யாழ். மாவட்டச் செயலகத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற, நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வின் போது, பெண்ணொருவர் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அப்பெண் கூறியதாவது,

'சிங்களவர்களுடன் தமிழர்கள் இணைய வேண்டும். கலப்புத் திருமணம் செய்யவேண்டும் என்று, வடக்கு ஆளுநர் கூறுகிறார். தமிழ்ப் பெண்கள், வெளிநாடுகளில் மணம் முடிக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.  

வீதிகளில் நிற்கும் இராணுவத்தினர், நமது பெண் பிள்ளைகளை வழிமறித்து அடையாள அட்டையினை பறித்துக்கொள்வதுடன், தங்களைக் காதலிக்குமாறும் கட்டாயப்படுத்துகிறார்கள். இதற்கு அஞ்சியே, பெற்றோர்கள் தமது பெண் பிள்ளைகளை, சிறு வயதிலேயே வெளிநாட்டு மாப்பிளைகளுக்கு திருமணம் முடித்து அனுப்பி வைக்கிறார்கள்.

தற்போது, இங்குள்ள பாரிய பிரச்சினையே, இன விகிதாசாரப் பிரச்சினையாகும். புத்தர் ஒரு இந்துவாகவே பிறந்து வளர்ந்து, இறுதியில் இந்துவாகவே அடக்கம் செய்யப்பட்டார். ஆகவே, இந்து மத வரலாற்றினை அறியாமலா ஆளுநர் பேசுகிறார்' என அப்பெண் கேள்வி எழுப்பினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X