Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
'1990-1995ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை பார்வையிட அனுமதிக்க வேண்டும். இல்லையேல் அவர்களுடைய பெயர்ப் பட்டியலை காண்பிக்க வேண்டும்' என தாயார் ஒருவர் கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அமர்வில் கோரிக்கை விடுத்தார்.
'சரவணபவன் ரகுநாதன் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரில் கல்வி கற்றவர். 1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் அமைப்பில் இணைந்து மேஜர் செங்கதிர் என்பவரின் பாதுகாவலராக கடமையாற்றினார்.
இந்நிலையில், 1991ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வவுனியாவுக்குச் சென்ற போது அவர் காணாமல் போய்விட்டார்.
மறுநாள், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வந்து மகன் தொடர்பில் விசாரணை செய்து விட்டுச் சென்றனர். எனினும் 1991ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி அவர் வீரச்சாவு அடைந்து விட்டதாக அறிவித்தனர்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த சிலர், இவருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் உட்பூசல்கள் இருந்தன. எனவே, அவர் வவுனியாவுக்குச் சென்று அங்கு இராணுவத்தினரிடம் சரணடைந்துவிட்டதாக எம்மிடம் தெரிவித்தனர்.
அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 25 வருடங்களாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டோர் விடுதலை செய்யப்படுவர் என தெரிவித்தார்.
எனவே, 1990 -1995ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை பார்வையிட அனுமதிக்க வேண்டும் அல்லது அவர்களுடைய பெயர்ப்பட்டியலை காண்பிக்க வேண்டும்' என அவர் கோரிக்கை விடுத்தார்.
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago