2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

3,895 பேருக்கு பொதுசன மாதாந்த உதவிகள்

Niroshini   / 2016 மார்ச் 17 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள 3,895 பேருக்கு பொதுசன மாதாந்த உதவிக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாக பிரதேச புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதேச செயலகத்துக்குட்பட்ட 42 கிராம அலுவலர் பிரிவுகளிலும் வசிக்கும் மக்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனைவிட 124 பயனாளிகளுக்கு புற்றுநோய்க்கான கொடுப்பனவுகளும், 11 பயனாளிகளுக்கு காசநோய்க்கான கொடுப்பனவுகளும், 84 பயனாளிகளுக்கு சிறுநீரக நோய்க்கான கொடுப்பனவுகளும், 52 பயனாளிகளுக்கு முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவும், 2 பயனாளிகளுக்கு தொழுநோய்க்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன என அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X