2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

44 பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில், வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 44 பயனாளிகளுக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வாழ்வதார உதவிகள், கரைச்சிப் பிரதேச செயலகத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை (21) வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட கிராம அபிவருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள், மர அரிவு இயந்திரங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன..

முன்னாள் போராளிகள், வறிய நிலையிலுள்ள 100 குடும்பங்கள் இதற்காக தெரிவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக 44 பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

வடமாகாண கிராமிய அபிவிருத்தி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் ஆகியோர் இதில் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X