2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

'போராட்டங்கள் வலுவடையும்'

Niroshini   / 2017 மே 14 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“வடக்கு, கிழக்கு மாகாணங்களில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டு வரும் போராட்டமானது, 100 நாட்களை எட்டவுள்ள நிலையில், அடுத்தக்கட்டப் போராட்டமானது, இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் வலிமைமிக்கதாக அமையும்” என்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி சங்கத்தின் பிரதிநிதிகள், கிளிநொச்சியில் கலந்துரையாடலொன்றில் சனிக்கிழமை ஈடுபட்டனர். இக்கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர்கள் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்கள்,

“அரசியல்வாதிகளை நம்பிப் பல ஆண்டுகளை வீணடித்து நம்பிக்கை இழந்த நிலையிலேயே,  நாம் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

"எமது பிள்ளைகளைப் போராடி மீட்க வேண்டிய நிலைக்கு, நாங்கள் நம்பிய அரசியல்வாதிகள் எம்மை தள்ளியுள்ளனர்.

"இந்நிலையிலேயே எமது போராட்டத்தை எதிர்வரும் நாட்களில் எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டோம்” எனத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X