2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'பார்த்தீனியங்களை எமது காணிக்குள் பரவாமல் தடுங்கள்'

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

காங்கேசன்துறை வீதியிலிருந்து கட்டுவனுக்குச் செல்லும் வழியில் வலிகாமம் வடக்குப் பிரதேச செயலகத்துக்குச் சொந்தமான காணியில் காணப்படுகின்ற பார்த்தீனியச் செடிகள் தங்களின் காணிகளுக்குள் பரவாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த காணியில் அடர்த்தியாக பார்த்தீனியம் செடிகள் வளர்ந்துள்ளன. விவசாயத்துக்கு ஆபத்தான இந்த செடிகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்டோர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அந்தக் காணியிலுள்ள செடிகள் தங்கள் விவசாய காணிகளுக்குள்ளும் பரவும் அபாயம் ஏற்படும் எனவும் அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X