Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஜூலை 29 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படுவது தொடர்பில் எந்தவிதமான இறுதித் தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இது சம்பந்தமாக ஆலோசனைகள் பொருளியல் நிபுணர்களிடம் இருந்தும் மற்றவர்களிடம் இருந்தும் தற்போது பெறப்படுகின்றன என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததுள்ளார்.
பொருளாதார மையம், மாங்குளத்திலும் வவுனியாவிலும் அமையப்போவது எல்லோரும் அறிந்ததே. மாங்குளத்தில் கடல் உணவு சம்பந்தமான சந்தையும், வவுனியா மதகுவைத்தகுளத்தில் மரக்கறிச் சந்தையும் நிறுவப்படும் என்ற செய்தி மக்களிடையே பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, எந்தவிதமான இறுதித் தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இது சம்பந்தமான ஆலோசனைகள், பொருளியல் நிபுணர்களிடம் இருந்தும் மற்றவர்களிடம் இருந்தும் தற்போது பெறப்படுகின்றன.
எங்கு எவ்வாறான சந்தை அமைக்கப்பட வேண்டும் என்பது சம்பந்தமான தீர்மானம், ஆலோசனைகள் பெற்ற பின்னர் எம்மால் எடுக்கப்படும். தீர்மானம் எடுக்கப்படாத ஒரு விடயம் பற்றி மக்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
8 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
2 hours ago