2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'பிரதமரின் பேச்சு இனவாதம்'

Niroshini   / 2016 ஜனவரி 20 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

காணாமற்போனவர்கள் இறந்திருக்கலாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய கருத்தானது, இனவாதக் கருத்து மாத்திரமல்ல, அது ஆதிக்க வெறியான பேச்சு என வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் 15ஆம் திகதி நடைபெற்ற பொங்கல் விழாவில், உரையாற்றிய பிரதமர், காணாமற்போனவர்களில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

காணாமற்போனோர் கொல்லப்பட்டிருந்தால் அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்களா என்பதை பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றார்.

அனந்தியின் கணவரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலைப் பொறுப்பாளருமான எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரனும் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு காணாமற்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X