2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'பிரபாகரன் எப்போது இறந்தார்?'

Kogilavani   / 2016 மார்ச் 11 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

'தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் எனக்கூறும் அரசாங்கம், அவர் எப்போது கொல்லப்பட்டார் மற்றும் அவரது சடலத்துக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் எந்தத் தகவலையும் இதுவரையில் வெளியிடவில்லை' என வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை (10) இடம்பெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மேற்கண்ட விடயம் பற்றி நான் கேட்டால், அது தேசிய பாதுகாப்பு விடயம். சட்டமா அதிபர் திணைக்களத்தின் தகவல் என பதில் சொல்லமாட்டார்கள். அரசாங்கம் தன்னைத் தானே காப்பாற்றும் முயற்சிகளுக்கு நாங்கள் துணைபோகக்கூடாது. அனைத்து தகவல்களையும் அரசாங்கம் வெளியிடவேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X