2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பாலை மர தீராந்திகள் மீட்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி முட்கொம்பன் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட சுமார்; ஆறு இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பெறுமதியான பாலை மர தீராந்திகள் ஞாயிற்றுக்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி முட்கொம்பன், அக்கராயன்குளம் புதுமுறிப்பு ஆகிய பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதிகளில் நீண்டகாலமாக பெறுமதி வாய்ந்த பாலை, முதிரை மரங்கள் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்டு கடத்தப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களையடுத்து, பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (14) முட்கொம்பன் காட்டுப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சுமார் ஆறு இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பெறுமதியான பாலைமரத் தீராந்திகள் கடத்தப்படவிருந்த நிலையில் மீட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X