Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மே 17 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
“வடக்கு- கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க வேண்டிய தேவையுடைய சக்திகளால், சில பெளத்த பிக்குகள் விலைக்கு வாங்கப்பட்டு, அவர்களின் ஊடாக, சிங்கள- முஸ்லிம் கலவரமொன்றை ஏற்படுத்துவதற்கான சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்று, தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, இன்று தெரிவித்துள்ளார்.
இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளின் பின்னணி குறித்து விவரிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "எமது நாட்டிலுள்ள மக்களுக்குள் ஒருபோதும் குரோதங்கள் தோன்றவில்லை. வெளிச்சக்திகளின் தலையீடுகளே எமக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி, எம்மை பிரித்தாளுகின்றன.
“முன்பு, வடக்கு- கிழக்கு மாகாணங்கள் சிங்கள, முஸ்லிம் சமூகங்களின் இணக்கமின்றி இணைக்கப்பட்டு, இப்பகுதி இந்தியாவின் கொலனி போன்று மாற்றப்பட்டிருந்தது. அப்படியொரு சந்தர்ப்பத்தை மீண்டும் உருவாக்க வெளிச்சக்திகள் முனைகின்றன. இதற்கு சிங்கள- முஸ்லிம் இனக்கலவரம் ஒன்று அவசியமாகிறது. இதனை எல்லோரும் உணரந்து கொள்ள வேண்டும்.
“மக்களுக்குள் எவ்வித வேற்றுமையும் இல்லை. மதங்கள் அனைத்தும் தர்மத்தையே போதிக்கின்றன. எம்மை குழப்ப எங்கோ திட்டமிடப்படுகிறது என்பதை உணர வைப்பதே இன்று முக்கிய தேவையாக உள்ளது.
“யுத்தம் நிறைவடைந்த கையோடு இந்த நாட்டை பிளவுபடு்த்த சில சக்திகள் திரைமறைவில் வரிந்து கட்டிக்கொண்டு செயற்படுகின்றன. இவற்றை உணர்ந்து கொண்டால் எஙகே கோளாறு உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்" என்றார்.
39 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
3 hours ago