2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'பிழையான செய்திகள் வெளிவருவது வேதனையளிக்கின்றது'

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை தொடர்பாக சில ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளானது முற்று முழுதாக தவறானது என மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஓய்வு பெற்ற ஆயர் அதி வண ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஞாயிற்றுக்கிழமை(17) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

மன்னார் மறைமாவட்ட ஆயராக கடமையாற்றிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை, சுகயீனம் காரணமாக் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தற்போது மன்னார் ஆயர் இல்லத்தில் நலமுடன் இருக்கின்றார்.ஆனால் அவர் மரணித்து விட்டதாக சில ஊடகங்களில் பிழையான செய்திகள் வெளிவந்துள்ளன. குறித்த செய்தியை மன்னார் ஆயர் இல்லம் முற்று முழுதாக மறுக்கின்றது.

எனவே, ஆயர் தொடர்பாக வாதந்தியான செய்திகளை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளவும். ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தொடர்பாக செய்திகளை வெளியிடுவதாயின், மன்னார்  ஆயர் இல்லத்துடன் தொடர்பு கொண்டு செய்திகளை வெளியிடுங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X