Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 10 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
பாவணையாளர் அதிகாரசபையின் சட்டத்தினை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட 753 வழக்குகளுக்கு 31 இலட்சத்து 67 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக நீதிமன்றங்களினால் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அதிகார சபையின் யாழ். மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரம் வசந்தசேகரம் தெரிவித்தார்.
பொருட்களை அதிகூடிய விலைக்கு விற்பனை செய்தமை, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் நிறை குறைந்த பாணை உற்பத்தி செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களில் கடந்த வருடம் 754 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
மல்லாகம், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, ஊர்காவற்துறை, மற்றும் சாவகச்சேரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கே 3,167,500 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக இணைப்பதிகாரி மேலும் கூறினார்.
ஜனவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 24 வழக்குகளுக்கு 1,39,500 ரூபாயும் பெப்ரவரியில் 45 வழக்குகள் தொடர்பில் 92,500 ரூபாயும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட 56 வழக்குகளுக்கு 335,500 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் மாதம் 82 வழக்குகள் மீது 109,000 ரூபாயும் மே மாதம் 53 வழக்குகளுக்கு 251,500 ரூபாயும் யூன் மாதம் 51 வழக்குகளுக்கு 302,500 ரூபாயும் யூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் 104 வழக்குகளுக்கு 760,000 ரூபாயும் நீதிமன்றங்களினால் வர்த்தகர்களுக்கு அபராதமாக அறவிடப்பட்டுள்ளது.
மேலும்,செப்டெம்பர் மாதம் 54 வழக்குகளுக்கு 334,500 ரூபாயும் ஒக்டோபர் மாதம் 55 வழக்குகளுக்கு 253,500 ரூபாயும் நவம்பர் 89 வழக்குகளுக்கு 422,000 ரூபாயும் தண்டமாக விதிக்கப்பட்டுள்ளது.
இவ் அபராத தொகை இவ் வருடத்தில் அதிகூடிய தொகையாக காணப்படுகின்றது. இக் காலப்பகுதி அத்தியாவசிய பொருட்கள் விலைகுறைப்பு செய்யப்பட்ட காலமாகும். இந் நிலையில் சில வர்த்தகர்கள் விலை குறைப்பு செய்த பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டுகளில் பிடிப்பட்டிருந்ததாக இணைப்பதிகாரி கூறினார்.
மேலும் டிசெம்பர் 140 வழக்குகளுக்கு 167,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் தாக்கல் செய்யப்பட்ட அனேகமான வழக்குகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
46 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
5 hours ago