2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தயார்': பருத்தித்துறை தாதியர் சங்கம்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள், வைத்தியசாலை நிர்வாகத்துக்கு எதிராக நாளை 06ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக வைத்தியசாலை தாதியர் சங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'தாதி உத்தியோகத்தர்களின் பிரச்சினை தொடர்பாக வைத்திய அத்தியட்சகருக்கு பலமுறை கடிதம் மூலம் அறியத் தந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி வைத்தியசாலையில் நடந்த முகாமைத்துவக் கூட்டத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால், தாதியர்களின் கடமை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வாக அனைத்து விடுதி பொறுப்பு தாதிய உத்தியோகத்தர்கள், வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்திய அத்தியட்சகர் ஆகியோர் அடங்கலான கலந்துரையாடல் ஒன்றின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு பணிக்கப்பட்டது.

இப்பணிப்பை எந்தவித்திலும் பொருட்படுத்தாது, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கருத்தை புறக்கணித்து, நீதிக்கு புறம்பான நடைமுறைச் சிக்கல் நிறைந்த, யாதார்த்தத்துக்கு முரணான வகையில் தாதிய பராமரிப்பை பாதிக்கும் வகையில் தன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து தனிநபர்களை பழிவாங்கும் நோக்குடன் அத்தியட்சகர் செயற்பட்டு வருகின்றார்.

தாதியத்தையும் தாதி உத்தியோகத்தர்களையும் பாதுகாக்கவேண்டிய நாம், 6ஆம் திகதி தொடக்கம் தொழில் சங்க நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளோம்' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X