2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பனை வடலிக்குள் இருந்த குண்டு செலிழக்கப்பட்டது

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

சாவகச்சேரி - தனங்கிளப்பு வீதியில் அருகில் பனை வடலிக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு, சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் நேற்று திங்கட்கிழமை (18) செயலிழக்கப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியால் சென்றவர்கள் இக்குண்டை அவதானித்து பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்கினர். 

இது தொடர்பில் பொலிஸார், நீதிமன்றத்தில் கவனத்துக்கு கொண்டு சென்றனர். 

நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அங்கு சென்ற விசேட அதிரடிப் படையினர் குண்டை மீட்டு, பாதுகாப்பான இடத்தில் செயலிழக்க வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X