Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2016 ஏப்ரல் 02 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
விவசாயிகள் நெற்செய்கையில் மட்டும் ஈடுபடாது பருவ காலங்களிற்கேற்ப பிறபயிர்ச்செய்கையிலும் ஈடுபடுவதன் மூலம் அதிகமான வருமானங்களைப் பெற்றுக்கொள்ளமுடியுமென கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
புதுமுறிப்புக் குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'கிளிநொச்சி மாவட்டத்திலே தற்போது நெற்செய்கை மற்றும் உபதானியப் பயிர்;ச்செய்கை தொடர்பான கூட்டங்களை நடாத்தி வருகின்றோம். பயிர்ச்செய்கைகள் வெற்றிகரமாக அமையவேண்டுமென்பதற்காக திட்டமிட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அனைத்து குளங்களுக்குமான கூட்டங்கள் நிறைவுபெற்றுள்ளன.
இக்குளத்தின் கீழ் 835 ஏக்;கருக்கு நீர்;வழங்கக்கூடிய நிலைமை உள்ளது. நீர்ப்பாசனத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட காணிகளுக்கு நூறுவீதம் நீர்வழங்கக்கூடிய நிலையில் புதுமுறிப்புக் குளம் காணப்படுகின்றது. நீர்ப்பாசன திட்டங்களுக்கமைவாக பயிர்ச்செய்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டால் எவ்வித நீர்ப்;பற்றாக்குறையின்றி நெற்பயிர்ச்செய்கையினை வெற்றிகரமாக மேற்கொள்ளமுடியும்' என்றார்.
'அரசாங்கத்தின் கொள்கையின் படி கூடுதலாக விவசாய உற்பத்தியில் தன்னிறைவை அடையக் கூடியவகையில் பயிர்ச்செய்கையிலீடுபட வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உரமாக வழங்கப்பட்ட மானியம், தற்போது பணமாக வழங்கப்பட்டு வருகின்றது. சரியான முறையில் பயிர்ச்செய்கையிலீடுபட வேண்டும். பல்வேறு நடைமுறைகள் தற்போது மாற்றப்பட்டு வருகின்றன. அரச நிதிகள், மானியங்கள் வழங்கப்படுகின்றபோது பல்வேறு சிரமங்களுக்கும் கட்டுபாடுகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளோம். இறுக்கமான நடைமுறைகள் நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையிலுள்ளோம்'; என தெரிவித்தார்.
'நெற்செய்கையுடன் பிறபயிர்ச்செய்கைகளிலும் ஈடுபடுவீர்களானால் அதற்கான மானிய உதவிகள் நிதியுதவிகளை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமையுருவாகும். ஒரு பயிரில் மட்டும் தங்கியிராமல் காணிகளின் நிலைமைக்கேற்ப பருவ காலங்களில் ஈடுபடுவீர்களானால் சிறந்த வருமானங்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாகவிருக்கும்' எனவும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன், கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் ந.சுதாகரன், கிளிநொச்சி நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஜி.செந்தூரன், கிளிநொச்சி பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா, கிளிநொச்சி கமநலசேவை உதவிஆணையாளர் ரி.தயாரூபன், கமத்தொழில் காப்புறுதி சபையின் உதவிப் பணிப்பாளர் து.கிரிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
21 minute ago
2 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
7 hours ago
9 hours ago