Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 மார்ச் 25 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஸன்
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது மக்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், தென்னிந்திய நடிகர் ரஐpனிகாந்த் யாழுக்கு வருகை தருவது பொருத்தமற்றது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
ரஐpனிகாந்த் வருவதற்கு யாரும் எதிரானவர்கள் அல்ல. ஆனால், மக்களின் பிரச்சினைகளுக்கு ரஐpனிகாந்த் இந்திய அரசுடன் தனக்குள்ள உறவைப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து அதனைத் தீர்த்து வைத்த பின்னர் வரலாம் என்றும் குறிப்பிட்ட்டார்.
நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ் தொடர்பாக மேலும் தெரிவித்திருப்பதாதவது,
வவுனியாவில் ஞானம் பவுன்டேசன் அமைப்பால் அமைக்கப்பட்ட வீடுகளை, மக்களிடம் கையளிப்பதற்காக எதிர்வரும் ஒன்பதாம் திகதி, தென்னிந்திய திரைப்பட நடிகர் ரஜனிகாந்த், யாழுக்கு வருகைதரவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இங்கு ரஐனிகாந்த் வருவதற்கு யாரும் எதிரானவர்கள் அல்லர்.
ஆனால், இன்று முக்கிய விடயங்களுக்காக வடக்கின்ற பல்வேறு இடங்களிலும் மாதக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதாவது மக்களது நிலமீட்பு போராட்டங்களும், காணாமல் போனவர்களது போராட்டமும் இடம்பெற்றுக் கொண்டு உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் அவரது வருகை அவசியமானதா என்ற நிலை, எல்லோர் மத்தியிலும் ஏற்பட்டிருக்கின்றது.
இந்நிலையில், அவரிடமிருந்து நாங்கள் நிறைய விடயங்களையும் எதிர்பார்க்கின்றோம். அவர் புகழ் பெற்ற நடிகர் என்பது மட்டுமல்லாமல் ஆன்மீகவாதியும். அத்தோடு, இந்திய மத்திய அரசுடனும் பிரதமருடனும் நெருங்கிய தொடர்பையும் கொண்டிருக்கின்றவர்.
ஆகவே, அவ்வாறானவர் இலங்கைக்கு வருவதற்கு முன்பாக இந்திய மத்திய அரசாங்கத்துடன் அதாவது பிரதமருடன் பேசி, மக்களது காணி மீள கையளிப்பது தொடர்பாக காணாமல் போனவர்களுக்குத் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக வலியுறுத்தி இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.
இங்கு லைக்கா நிறுவனம் கட்டிய வீடகளைக் கட்டித் திறந்து வைப்பது பெரிய விடயமல்ல. அதனை யாரும் திறந்து வைக்கலாம். அவர்களுக்குத் தேவை இன்றிருக்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வே தான். அதனை அவர் மத்திய அரசாங்கத்துடன் பேச வலியுறுத்தி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புகளை வைத்துள்ள ரஜனியை அழைத்துவரும் லைக்கா நிறுவனமும் தமிழ் மக்களது பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டியதே, தற்போது தமிழ் மக்கள் எதிர்பார்த்திருப்பதாகும்.
இதற்கு மாறாக சினிமா நடிகர்களைக் கொண்டு வந்து வீட்டு மனைகளைக் கையளிக்கிறோம். திறப்பு விழாக்களை நடத்துகிறோம் என்ற பெயரில் இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்தச் சூழ்நிலையில் வருவதானது ஓர் ஆராக்கியமான விடயமாக இருக்க மாட்டாது.
ரஐனிகாந்த, இந்த மண்ணுக்கு வரலாம். ஆனால், இவ்வாறான பிரச்சினைகள் தீர்ப்பதற்கு உதவிய பின் அல்லது இவ்வாறான பிரச்சினைகள் தீர்ந்ததற்கு பிற்பாடு அதாவது மக்களது காணிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் முழுமையாக குடியேறி காணாமல் போனோர் சம்மந்தமாக திட்டவட்டமாக அரசாங்கம் ஒரு பதிலைக் கூறியதன் பிற்பாடு சில சமயங்களில் நாட்டில் ஒரு சுமூக சூழ்நிலை இருக்கக் கூடிய சந்தர்ப்பத்தில் யாரும் வர முடியும். எவ்வாறான கொண்டாட்டங்களையும் நடாத்த முடியும்.
நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்தப் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் இந்திய அரசுடன் பேசுங்கள் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுங்கள் என்றே இந்தச் சந்தர்ப்பத்தில் லைக்கா நிறுவனத்திடமும் ரஐனிகாந்திடமும் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்" என்றார்.
53 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
5 hours ago