Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 மார்ச் 14 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
மூன்று மாதங்களேயான தனது பெண் சிசுவை, தாயொருவர் வீட்டின் சுவரில் அடித்து படுகொலை செய்த சம்பமொன்று கிளிநொச்சி, திருநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றுள்ளது என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி திருநகர் பகுதியைச் சேர்ந்த நரேஸ்குமார் மதுசாளினி என்ற பெயரைக்கொண்ட சிசுவே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சிசு, தொடர்ந்து அழுதுகொண்டிருந்தமையால், அழுகையை நிறுத்த முடியாத கோபத்தில் தாய், அச்சிசுவை சுவரில் அடித்துள்ளார் என்று அறியமுடிகின்றது.
படுகாயங்களுக்குள்ளான சிசு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. அதனை கண்ட தாயும் மயங்கி விழுந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற பொலிஸார், ஸ்தலத்துக்கு விரைந்து சிசுவின் சடலத்தை மீட்டு, கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன், மயங்கிக் கிடந்த தாயையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
கிளிநொச்சியிலுள்ள திணைக்களம் ஒன்றில் பணியாற்றி வரும் மேற்படி பெண், நீண்ட காலமாக பிள்ளைப்பேறு இல்லாமல், இருந்துள்ள நிலையிலேயே அவருக்கு இக்குழந்தை 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதியன்று பிறந்திருந்தது என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
27 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
45 minute ago