2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

முதிரை மரக்குற்றிகளுடன் நால்வர் கைது

George   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, அறிவியல் நகர் பகுதியில் முதிரை மரக்குற்றிகளை கடத்திய  சந்தேகநபர்கள் நான்கு பேரை,நேற்று திங்கட்கிழமை (17) அதிகாலை கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களிடமிருந்து சுமார் 4 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள முதிரை மரக்குற்றிகளும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கெப் ரக வாகனமும் மீட்கப்பட்டுள்ளது.

அறிவியல் நகர்ப் பகுதியிலிருந்து ஏ – 9 வீதி வழியாக இவற்றை கடத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்ற போது, அங்கு சென்ற பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்து, மரக்குற்றிகளைக் கைப்பற்றியுள்ளனர். சந்தேகநபர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X