2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதவரவு நல்குவோம்'

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூட்டமைப்பின் அலுவலகங்களை முற்றுகையிடும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கத்தின் போராட்டத்துக்கு, தமது ஏகோபித்த ஆதரவை வழங்குவதாக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழ் உறவுகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்காக நீதி கோரி வீதியில் இறங்கிப்போராடாமல், அரசாங்கத்துக்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்காமல், தமது போராட்டங்களின் நியாயப்பாடுகளை நீர்த்துப்போகச்செய்து, 'காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களே இலங்கையில் நடைபெறவில்லை' என்றவாறான ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி, அரசாங்கத்தை பாதுகாக்கும் மென்போக்கு அரசியல் செயற்பாடுகளில் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

சுயமரியாதையுடனும் பகுத்தறிவுடனும் வாழத்துடிக்கும் ஒரு சமுகத்தின் அரசியல் அபிலாசையின் வெளிப்பாடாகவே குறித்த முற்றுகைப்போராட்டத்தை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு நோக்குகிறது.

நம்மை பீடித்து உலுக்கிக்கொண்டிருந்த அச்சம் நீங்கி, உளத்தூய்மையுடனும்  நெஞ்சுரத்துடனும் வவுனியா பிரஜைகள் குழு தனது முழுமையான ஆதரவை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கத்தின் முற்றுகைப்போராட்டத்துக்கு வழங்குகின்றது.

எப்போது ஒரு இனம், தன்னைத்தானே அடிமை என்று உணருகின்றதோ, அத்தகையதொரு உணர்வு அந்த இனத்தை கௌவியிருக்கும் வரை, அந்த இனத்துக்கு எவராலும் விடுதலையை பெற்றுக்கொடுக்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X