Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மே 10 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
இலங்கையில் வறுமையால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் இருப்பதற்கு, முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வளமான காணிகளையும் வளங்களையும் முப்படையினரும் கையகப்படுத்தி வைத்திருப்பதே காரணம்” என, வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.
“படைத் தரப்பினர் சுவீகரித்தும் ஆக்கிரமித்தும் வைத்திருக்கின்ற பொது மக்களின் காணிகளையும் வளங்களையும் விடுவித்தால், வறுமை ஒழிப்புக்கான உதவித்திட்டமே அவசியமில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் 92ஆவது அமர்வு, கைதடியிலுள்ள மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றபோது ரவிகரன் இதனைக் கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தின் வளங்கள் அழிக்கப்பட்டிருப்பதுடன் இருக்கின்ற வளங்களும் சுவீகரிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக முப்படையினர் எமது வளங்களை அபகரித்து வைத்துள்ளனர்.
“முல்லைத்தீவு மாவட்டம் இலங்கையிலேயே அதிகம் வறுமையான மாவட்டமாக காணப்படுகின்றது. எமது வளங்களை சுரண்டாது விட்டால் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். வறுமையிலிருந்து விடுபட முடியுமென்று நினைக்கிறேன்.
முப்படைகளின் ஆக்கிரமிப்பிலுள்ள தமிழ் மக்களது காணிகளை விடுவிக்க அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.
19 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
31 minute ago