2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'மீள்குடியேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்'

George   / 2016 மார்ச் 17 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும் மக்களுடைய மீள்குடியேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிறிஸ் ஹச்ஸன், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவிடம் கோரிக்கை விடுத்தார்.

யுத்தத்தின் பின் யாழ். மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் குழு, யாழ்ப்பாணத்துக்கு புதன்கிழமை (16) விஜயம் செய்திருந்தது.

இதன் போது யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியை பலாலி தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

'நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மக்களுடைய காணிகள் விடுவிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. மேலும், பல நூற்றுக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களை உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இழந்து நலன்புரி முகாமில் வாழ்ந்து வருகின்றமை தொடர்பில் மாவட்ட செயலாளரினால் கூறப்பட்டுள்ளது. அவர்களுடைய காணிகளையும் விடுவித்து துரிதமான மீள்குடியேற்றத்துக்கு படையினர் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அப்போது தான் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படும்' என உயர்ஸ்தானிகர் கூறினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கட்டளைத்தளபதி, 'கல்வி, சுகாதாரம், போன்றவற்றில் இராணுவத்தினரின் பங்களிப்பு காணப்படுகின்றது. மீளக்குடியமர்ந்த மக்களுக்கு தேவையான உதவிகளை படையினர் மேற்கொண்டு வருகின்றனர்' எனக் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X