Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 14 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பாலை கொள்வனவு செய்யும் நிறுவனங்கள், அப்பாலினை கிளிநொச்சி மாவட்ட மக்களின் பயன்பாட்டுக்கு பயன்படுத்துமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (12) பிற்பகல் நடைபெற்ற பால் விற்பனை மற்றும் கொள்வனவில் ஈடுபடுபவர்களுக்கான கலந்துரையாடல் இடம்பெற்றது.இதில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் 8 ஆயிரம் லீற்றர் பால் நாள்தோறும் பெறப்படும் நிலையில், அதனை கொள்வனவு செய்யும் நிறுவனங்கள் பிற மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லாது மாவட்ட மக்களுக்கே பயன்படுத்த வேண்டும். போசாக்கு ரீதியாக பாதிப்புகள் மாவட்டத்தில் காணப்படுகின்றன.
இது தொடர்பான முடிவை பால் கொள்வனவு செய்யும் நிறுவனங்கள் அறிவிக்க வேண்டும். இல்லையேல் மாவட்டச் செயலகம் மாவட்டத்தின் பால் பயன்பாடு தொடர்பாக தகுந்த நடவடிக்கையெடுக்கும் என்றார்.
1 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago