2025 ஜூலை 23, புதன்கிழமை

'முஸ்லிம்களை பலவந்தப்படுத்தி குடியமர்த்த முடியாது'

Niroshini   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை எவராலும் பலவந்தப்படுத்தி குடியமர்த்த முடியாது  என வவுனியா மாவட்ட இள நல்லுறவுக்கான ஒன்றியத்தின் தலைவரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.ஏ.அப்துல் பாரி தெரிவித்தார்.

'தற்போது வடபுல முஸ்லிம்களும் சவால்களும்'; எனும் தலைப்பில் நேற்று (14) வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு என்பது முஸ்லிம்களின் பாரம்பரிய பூமியாகும்.முஸ்லிம்களை வந்தேறு குடிகளாக பார்ப்பதை முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இன்று பொதுமக்கள் தரப்பிலிருந்து பல்வேறு முறைப்பாடுகள் எமக்கு வருகின்றன.குறிப்பாக சில அரச அதிகாரிகள்; இன ரீதியான செயற்பாடுகளில் செயற்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த பிரிவினை தான் எமக்கு அழிவினை ஏற்படுத்தியது.மீண்டும் அவ்வாறானதொரு நிலையினை தோற்றுவிக்காதீர்கள் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .