Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூலை 23 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
'மத்திய அரசின் கையாட்களாக மாகாண அரசு செயற்படமுடியாது. எமது நிலைமையை புரிந்து மத்திய அரசு எமமுடன் இணைந்து செயற்பட தவறின் எம்மால் எதுவும் செய்யமுடியாது' என உலக வங்கியின் அலுவலர்களிடம் எடுத்துரைத்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (22) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த உலக வங்கியின் அலுவலர்களான பீற்றர் டி எலிஸ், ஜெசிக்கா ரசல் ஸ்மிற், யென் மற்றும் நெல்சிப் திட்டத்தை சேர்ந்த சின்னத்தம்பி மனோகரன் ஆகியோர் வடமாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இக் கலந்துரையாடல் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 'யாழ். வந்த குழுவினர், மத்தியும் மாகாணமும்; மாகாண அரசாங்கத்தின் கீழ் உள்ள பிரதேச சபைகளும் கூடிய நெருக்கத்துடன் வேலைகளை கொண்டு நடாத்துவது தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.
இதன் போது மத்திய அரசாங்கமானது மாகாண அரசாங்கத்தை பொருட்படுத்தாமல் பலவழிகளில் உதாசினப்படுத்துவதை அவர்களுக்கு சுட்டிக்காட்டியிருந்தேன்.
இதன்போது அவர்கள் இந்தோனேசியாவில் அனுபவ ரீதியாக தாம் பார்த்த பல விடயங்களை குறிப்பிட்டிருந்தார்கள். இதன்படி அதிகார பரவலாக்கமானது முக்கியமானது.
உள்ளுராட்சிமன்றங்கள் கூடிய வலுவுடன் வேலை செய்வதற்கு அதிகார பரவலாக்கம் முக்கியமானது என்ற கருத்தை அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்நிலையில் எங்களுக்குள் போதுமான புரிந்துணர்வு இருக்கின்றது. ஆனால் அதனை அரசாங்கத்திற்கு எடுத்துரைப்பது தான் பிரச்சனையாகவுள்ளது. அந்தவகையில் நாம் அரசாங்கத்திற்கு எத்தனையோ விதத்தில் எடுத்துரைத்துவிட்டோம்.
எங்களுடைய பிரச்சனைகளை நாங்கள் தீர்த்துக்கொள்ளதக்க வகையில் ஏற்ற உதிவிகளை செய்யவேண்டும் எங்களை கட்டுபடுத்த வேண்டாம். என தாம் மத்திய அரசாங்கத்திடம் பலவாறு கேட்டிருந்தமையும் தாம் அவர்களுக்கு சுட்டிக்காட்டினேன்' அவர் மேலும் கூறினார்.
8 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
2 hours ago