2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

61 மருத்துவர்களே உள்ளனர்

Niroshini   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 153 மருத்துவர்கள் பணிபுரிய வேண்டியநிலையில், 61 மருத்துவர்கள் மாத்திரமே பணியில் ஈடுபட்டுவருவதாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார பணிப்பாளர் ரி.பூங்கோதை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருபொது மருத்துவமனையும் இரண்டு ஆதார மருத்துவமனைகளும் ஐந்து சுகாதாரப் பணிமனைகளும் உள்ளன.

மாவட்டத்தில் உள்ள 17 நோயாளர் காவு வண்டிகளில், ஆறு வண்டிகள் திருத்தப்பட வேண்டியுள்ளன.
மேலும், மாவட்டத்தில் மரணவிசாரணை அதிகாரிகள் இல்லை. இதேவேளை, குமுழமுனை பிரதேச மருத்துவமனையில் விடுதிகளுக்கான நெருக்கடி காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X