Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்திலே முஸ்லிம் மக்கள் மீண்டும் குடியேறிவருகின்றார்கள், முன்னரைப் போன்ற ஒரு செழிப்பான சூழல் இங்கே உருவாகவேண்டும், இப்போது யுத்தம் முடிவடைந்திருக்கின்றது, ஒரு நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திலே இருக்கின்றது, நீண்டகாலமாக முஸ்லிம் கலாசாரத் திணைக்களம் முஸ்லிமல்லாத அமைச்சர்களில் கீழ் இயங்கியது,
பள்ளிவாயல்களைப் பதிவு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டன, முஸ்லிம்களுடைய சமய விவகாரங்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்த காலம் இப்போது முடிந்துவிட்டது” என தபால், தபால்சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம்.ஹலீம், தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சின்னப் பள்ளிவாசலில், யாழ். முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளோடு அணமையில் இடமபெற்ற கலந்துரையாடலினபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“முஸ்லிம் சமய கலாசார விவகாரங்களிலே, வக்பு சபையிலே பல்வேறு பிரச்சினைகள் முன்வைப்பட்டுகின்றன. நாட்டின் எல்லாப் பிரதேசங்களிலும் பள்ளிவாசல்கள் சார்ந்து பிரச்சினைகள் இருக்கின்றன. உதாரணமாக, கொழும்பு சம்மாங்கோட்டைப் பள்ளிக்கு சொந்தமான எத்தனையோ கடைகள் இன்று முறையாக நிர்வகிக்கப்படுவதில்லை என்ற பிரச்சினை முன்வைக்கப்பட்டிருக்கின்றது, அதே போன்று யாழ்ப்பாணத்திலே இருக்கின்ற பள்ளிவாசல்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் இருக்கின்றன, இவற்றை நாம் நிச்சயம் கருத்தில் எடுப்போம்” என்றார்.
“யாழ்ப்பாணம் பள்ளிவாசல் நிர்வாகத்தில் வெளி மாவட்டங்களில் வசிக்கின்ற யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்துவதாக ஒரு பெரியவர் குறிப்பிட்டார். அந்த நிலை உண்மையானதுதான், அவர்களை முற்றாக ஒதுக்கிவிட்டு நிர்வாகங்களை நடாத்த முடியாது, ஆனால், ஊரிலே மீள்குடியேறியிருக்கின்றவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பள்ளிவாசல்களை சூழ இருக்கின்றவர்கள் ஊர் ஜமா அத்தினராக பதிவு செய்யப்பட்டு அவர்களில் இருந்து நிர்வாகங்கள் தெரிவு இடம்பெறவேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago