Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜெகநாதன்,சொர்ணகுமார் சொரூபன்
யாழ். மாவட்டத்தில் தொழில்வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் மையத்தினை அமைக்கவும் அதற்கான ஆலோசனைகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்க கனேடிய அரசாங்கம் உறுதுணையாக இருக்கும் என இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் சீலி வைற்றிங் தெரிவித்தார்.
வடமாகாணத்துக்கான இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் சீலி வைற்றிங் புதன்கிழமை (16) காலை யாழ். மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்து மாவட்ட செயலர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, கனேடிய அரசாங்கத்தின் நிதியுதவி மூலம் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகள் மற்றும் சமூக மேம்பாட்டுத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இச்சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த மாவட்ட செயலர்,
இலங்கை பல்வேறு துறைகளில் அபிவிருத்திகளை கண்டு வரும் இத்தருணத்தில் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க கனேடிய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. குறிப்பாக சுகாதாரம், உட்கட்டமைப்பு போன்ற துறைகளுக்கான உதவிகளையும் வழங்க எதிர்பார்த்துள்ளது. அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க இலங்கை அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை முன்வைக்கவுள்ளதாக சீலி வைற்றிங் தெரிவித்தார்.
மேலும்,இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், சமத்துவம், ஆன்மீகம் போன்ற பல செயற்பாடுகளை கொண்டுள்ள கனடா நாடு அதனை இலங்கை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் புதிய நடமுறைகளை முன்னெடுக்க எப்போதும் இலங்கை அரசாங்கத்துடன் உறுதுணையாக இருப்போம் என கனடா உயர்ஸ்தானிகர் செல்லி வைட்டிங் தெரிவித்ததாக யாழ் மாவட்ட செயலர் தெரிவித்தார்.
இதேவேளை,இலங்கைக்கான கனடா தூதுவர் சீலி வைற்றிங் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை வடமாகாண சபையில் புதன்கிழமை (16) சந்தித்துக் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
16 minute ago
32 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
32 minute ago
2 hours ago
3 hours ago