Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 மார்ச் 01 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
கச்சாய் இராணுவ முகாமைச் சேர்ந்த ராமநாயக்க என்ற அதிகாரி தலைமையிலான இராணுவத்தினரே எனது கணவரைப் பிடித்துச் சென்றனர் என காணாமற்போன வைத்திலிங்கம் மகேந்திரன் என்பவரின் மனைவி மகேந்திரம் சோமகலாவதி காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்று சாட்சியமளித்தார்.
சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் காணாமற்போனவர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் அமர்வு பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.
அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர், '2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி, தும்புத்தடிக்கு தடி வெட்;டச் சென்ற எனது கணவரை இராணுவம் பிடித்துச் சென்றது. அவரை ஒரு வருடகாலம் வரணி முகாமில் வைத்திருந்தார்கள். அதன் பின்னர் அவருக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் எதுவும் தெரியாது' என்றார்.
31 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
8 hours ago
9 hours ago