2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'ரிஷாட்டின் பதவிக் காலத்தில் பலர் காணாமல் போனார்கள்'

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

'அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முன்பு மீள்குடியேற்ற அமைச்சராக நியமிக்கபட்டதனாலேயே முகாம்களில் இருந்து பல தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர்' என, யாழ். மாவட்டச் செயலகத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற, நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வின் போது, பெண்ணொருவர் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அப்பெண், 'அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,  மீள்குடியேற்ற அமைச்சராக நியமனம் பெற்றதன பின்னர், முகாம்களில் இருந்த மக்களுடன் நேரில் சென்று கலந்துரையாடினார். அதன் விளைவு, முகாம்களில் இருந்த தமிழ் இளைஞர்கள் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். இதற்கான முழுப் பொறுப்பையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  தான் ஏற்க வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X