Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மார்ச் 26 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
யாழ்ப்பாண பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினரால் வெளிவாரிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வணிக முதற்தேர்வு 2013 புதிய பாடத்திட்டம், வணிக இரண்டாம் தேர்வு 2013 புதிய பாடத்திட்டம், வணிக மூன்றாம் தேர்வு 2013 புதிய பாடத்திட்டம், வணிக நான்காம் தேர்வு 2013 புதிய பாடத்திட்டம், வணிக முதற்தேர்வு 2013 பழைய பாடத்திட்டம் மீள்பரீட்சை, வணிக மாணி பகுதி - 1 2013 பழைய பாடத்திட்டம் மீள் பரீட்சை, வணிக மாணி பகுதி - 2 பழைய பாடத்திட்டம் மீள்பரீட்சை, வணிக மாணி பகுதி - 3 பழைய பாடத்திட்டம் மீள் பரீட்சை ஆகியவற்றுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இப்பரீட்சைக்கு தோற்ற தகுதியான பரீட்சார்திகள் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் இயங்கும் மக்கள் வங்கி கிளையில 300 ரூபாயைச் செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டினை திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் சமர்ப்பித்து விண்ணப்பப்படிவத்தினை பெற்றுக் கொள்ளலாம்.
தபால் மூலம் விண்ணப்பப்படிவத்தினை பெற விரும்புபவர்கள் நிதியாளர், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் என்ற முகவரிக்கு எழுதப்பட்ட ரூபாய் 300க்கான காசுக் கட்டளையை சுயமுகவரி இடப்பட்ட ரூபாய் 70 பெறுமதியான முத்திரை ஒட்டப்பட்ட தபால் உறையுடன், உதவிப்பதிவாளர், திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். திருநெல்வேலி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
வணிகமாணி கற்கைநெறி தொடர்பாக கல்வியாண்டு 2011- 2012 அரையாண்டு பருவ அடிப்படையிலான கற்கை கால அளவுப் பெறுமதியிடப்பட்ட கற்கை அலகு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் ஏற்கனவே வணிக மாணிக் கற்கை நெறிக்கு பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் பதிவுகளை மேற்கொண்டவர்கள் மேற்படி பரீட்சைக்கு விண்ணப்பித்து விரைவில் தங்கள் கற்கை நெறியினை பூர்த்தி செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 25ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும். பரீட்சை நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும். மேலதிக தகவல்களினை பெற்றுக் கொள்ள விரும்பவர்கள் 021-2223612 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
4 hours ago
9 hours ago
30 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
30 Sep 2025