2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'வித்தியா கொலை வழக்கு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும்'

George   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கு இந்த மாத இறுதிக்குள், சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் தெரிவித்தார்.

இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (04) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, 12 சந்தேகநபர்களும் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

வழக்கின் நிலைமை தொடர்பில் மாணவி சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி ரஞ்சித்குமார் கேள்வி எழுப்பினார்.

'வழக்கின் விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் இந்த வழக்கு தொடர்பில் மேல் நீதிமன்றத்தில், சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப்பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்படும்' என கூறிய நீதவான், வழக்கை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் ஒத்திவைத்தார்.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா, கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X