2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

'வித்தியா கொலை வழக்கு விசாரணை கொழும்புக்கு ​வேண்டாம்'

George   / 2017 மே 15 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கை, கொழும்புக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம், புங்குடுதீவு மகா வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது.

முன்னதாக, மாணவி படுகொலை செய்யப்பட்டமை குறித்த வழக்கை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் 'ட்ரயல் அட் பார்' முறையில் நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது என தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், கொலை வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரம், யாழ். மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் பாரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த வழக்கை கொழும்புக்கு மாற்றுவதை கண்டித்தும், வழக்கை யாழ்ப்பாணத்திலேயே நடத்துமாறு வலியுறுத்தியும் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்கெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X