2025 ஜூலை 23, புதன்கிழமை

23 வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இல்லை

Niroshini   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வட மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் 23 வைத்தியசாலைகள் வைத்தியர்கள் இல்லாத நிலையில் காணப்படுவதாக  மாகாண சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் 102 வைத்தியசாலைகள் காணப்படுகின்றன. இவற்றில் பின்தங்கிய நிலையிலுள்ள பிரதேசங்களில் காணப்படும் 23 வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது.

கடந்த மாதம் வரையில் 32 வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இல்லாத நிலையிருந்தது. அதில் 9 வைத்தியசாலைக்கு வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மிகுதி வைத்தியசாலைகள் ஓய்வுபெற்ற வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையிலும் பல்கலைக்கழக மருத்துவப்படிப்பை முடித்து விட்டு உள்ளக பயிற்சியில் உள்ள மாணவர்களையும் கொண்டு இயக்கி வருகின்றன.  

இவ்வருடம்,பயிற்சி முடித்துவிட்டு வெளியேறும் வைத்தியர்களை தருவதாக சுகாதார அமைச்சர் ராஜிர சேனராத்ன உறுதியளித்துள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .