Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ். மாவட்டச் செயலகத்துக்கு அண்மையில் ஞாயிற்றுக்கிழமை (28) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் வீதிக்கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தார் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அபயசிங்க (வயது 42) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வாகனங்களை மறித்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, சாவகச்சேரி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள், தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்து இவர் மீது மோதியுள்ளது.
இதில் தலையில் படுகாயங்களுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தரை மீட்ட அப்பகுதி மக்கள், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இவ் விபத்து தொடர்பில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்ற இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago