2025 ஜூலை 23, புதன்கிழமை

'வெள்ள நிவாரணம் உரிய முறையில் கொண்டு சேர்க்கப்படும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

இந்திய, தமிழகம் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடமாகாண சபையால் சேரிக்கப்பட்டு வரும் நிதியானது உரிய முறையில் அம்மக்களுக்கு வழங்கப்படும் என வடமாகாண சigத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் வரவு – செலவுத்திட்டம் தொடர்பான 2 ஆம் நாள் அமர்வு  வடமாகாண சபையில் புதன்கிழமை (16) நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

'வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களுடைய சார்பில் உதவிகளை வழங்குவது வெறுமனே ஒரு மனிதாபிமான உதவியாக மட்டும் அமைவதில்லை. அது எங்களுக்கும் தமிழக மக்களுக்கும் உள்ள இரத்த உரித்தை, அந்த உரித்தினால் உருவான பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், எம்மால் உருவாக்கப்பட்டுள்ள நிதியத்துக்கு சாதி, மதம், இனம், மொழி என எந்த வித்தியாசத்தையும் கருத்தில் கொள்ளாமல் உதவிகளை வழங்கிய அனைத்து உள்ளங்களும் நன்றிக்குரியவை.

எமது நிதியத்துக்கு அதிகளவான பணம் சேர்ந்துள்ளது. அந்த நிதியை உரியமுறையில் கொண்டுசேர்ப்போம். அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .