2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

'வட்டுவாகல் பிரதேசம் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்றது'

George   / 2017 மார்ச் 27 , பி.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, வட்டுவாகல் கடற்படைத்தளம் அமைந்துள்ள பிரதேசம், பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற பிரதேசம் என கடற்படையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டுவாகல் பகுதியில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 372 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய 617 ஏக்கர் காணியில் வட்டுவாகல் கடற்படைத்தளம் அமைந்துள்ளது.

இப்பகுதியில், பொதுமக்களுக்கு சொந்தமான 600 வரையான கால்நடைகளும் உள்ளன. இவற்றை பொது மக்கள் விடுவிக்குமாறு பல தடவைகள் கோரியபோதும் அவை விடுவிக்கப்படவில்லை.

இதேவேளை, பல இடங்களில் பொதுமக்கள் தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வட்டுவாகல் கடற்படைத்தளம் அமைந்துள்ள பிரதேசம் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற பிரதேசம் என கடற்படையினரால் அறிவித்தல் பலகை வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X