2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வட மாகாண சபையின் சர்வதேச மகளிர் தினம்

Niroshini   / 2016 மார்ச் 10 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வட மாகாண நன்னடத்தைகள், சிறுவர் பராமரிப்புச் சேவைகளும் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் 'நிலையான எதிர்காலத்துக்கு வலுவான பெண்கள்' எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு நேற்று புதன்கிழமை (09) வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, மகளிர் தினத்தையொட்டி உருவாக்கப்பட்ட குறும்படங்கள் வெளியிடப்பட்டன.

மேலும், வட மாகாணத்திலுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், வன்முறைக்குள்ளாகும் பெண்கள் தொடர்பில் செய்யப்பட்ட பகுப்பாய்வு விளக்கவுரை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாகவும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன், வடமாகாண சுகாதார திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலக இணைப்பாளர் ரி.கனகராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X