Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சரவணபவஆனந்தம் திருச்செந்தூரன்
வடக்கில் விகாரைகளை கட்டுவதற்கு, தீவிரவாதிகளே எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் என, நாகவிகாரை விகாரதிபதி விமலசிறி தேரர் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட சர்வமத பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு, யாழ். மறைக்கல்வி நிலையத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
“வடக்கில் விகாரைகள் கட்டுவதற்கு, தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நாங்கள் இந்துமத தெய்வங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வழிபாடாற்றுகின்றோம் என்பதை முடிந்தால், நாக விகாரைக்கு வந்து பாருங்கள்.
தீவிரவாதிகள், நல்லிணக்கத்தை குழப்ப முயற்சிக்கின்றனர். அவற்றை முறியடிக்க மக்கள் ஆதரவளிக்க வேண்டும். போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்க நாம் கருமமாற்றி வருகிறோம். ஊடகங்கள் உண்மையான விடங்களை வெளியிடவேண்டும்” என்றார்.
ஊடகங்கள் எவ்வாறு மக்களுடைய மேம்பாட்டுக்கு பங்களிப்புச் செய்ய முடியும் என்ற கருப்பொருளில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், இன, மத நல்லிணக்கம், சிறுவர் துஸ்பிரயோகம், போதைப்பொருளுக்கு அடிமையாதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டதுடன் இதில், சர்வமதப் பிரதிநிதிகள், பேரவையின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
52 minute ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
4 hours ago
7 hours ago