2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வடமாகாண போக்குவரத்தின் இணைந்த நேர அட்டவணை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Niroshini   / 2016 மார்ச் 02 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்டுள்ள இணைந்த நேர அட்டவணையின் பிரதி மற்றும் வடமாகாண போக்குவரத்து நியதிச் சட்டம் ஆகியன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டன.

நாட்டின் போக்குவரத்து தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை (29) நடைபெற்றது. இதன்போதே, வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், மேற்கண்ட ஆவணங்களை, ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இவ்வாவணங்களைக் கையளித்து உரையாற்றிய அமைச்சர் டெனிஸ்வரன்,

'வடமாகாண போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் துறையினரம் இலங்கைப் போக்குவரத்து சபையினரும், வீதி ஒழுங்குகள் மற்றும் நேர அட்டவணையினைப் பின்பற்றுவதில்லை' என்றார்.

'அத்துடன், அவர்களிடையே கண்மூடித்தனமான போட்டித்தன்மை நிலவுவதால் பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றன. போக்குவரத்து விதிகளை மீறுவோரைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில், சட்டங்களை கடுமையாக அமுல்படுத்துவதோடு, அதில் இருக்கின்ற உச்சபட்ச தண்டனைகளை வழங்கவேண்டும்' என்றும் வலியுறுத்தினார்.

'அத்துடன், கடின உழைப்பினூடாக உருவாக்கப்பட்டுள்ள இந்த இணைந்த நேர அட்டவணை விவகாரத்தில், இலங்கைப் போக்குவரத்து சபையின் வட பிராந்தியத்துக்குப் பொறுப்பாக இருக்கின்ற அதிகாரிகள் கையொப்பமிடாது இழுத்தடிப்பு செய்துவருகின்றனர்' என்றும் டெனிஸ்டவரன் மேலும் கூறினார்.

ஷஅதற்கு பதிலளித்த ஜனாதிபதி, 'இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு இ.போ.ச.வின் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். வெகு விரைவில் அவர் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்' என்று உறுதியளித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X