2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வடமாகாணத்தில் தமிழ்ப் பண்டிதர்கள் அதிகம்

Niroshini   / 2016 ஜனவரி 26 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

வடமாகாணத்தில் தமிழ்ப் பண்டிதர்கள் அதிகம். ஆகையால் அறிவித்தலில் பயன்படுத்தப்படும் சொற்களை மிக அவதானத்துடன் பயன்படுத்த வேண்டும் என வடமாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில், செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்றது.

இந்த அமர்வில் சுகாதார அமைச்சின் நியதிச் சட்டம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் சைக்கிள் பாதுகாப்பு நிலையங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளை அமைத்து அதனை வைத்தியசாலை நலன்புரிச் சங்கம் நடத்துவதன் மூலம், சங்கத்துக்கு அது ஒரு வருமானம் தரக்கூடிய விடயமாக இருக்கும் எனவும் விரும்புகின்ற வைத்தியசாலைகள் இதனை நடைமுறைப்படுத்த முடியும் என்ற சட்டம் நியதிச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதன்போது, எழுந்த சிவாஜிலிங்கம், வடமாகாணத்தில் தமிழ் பண்டிதர்கள் அதிகம். நீங்கள் சைக்கிள் பாதுகாப்பு நிலையக் கட்டணம் என்று சொன்னால், அவர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களை கொண்டு வந்துவிட்டு சைக்கிள்களுக்கு மாத்திரே கட்டணம் அறவிடுகின்றீர்கள் என வியாக்கியானம் செய்வர். ஆகையால் சைக்கிள் பாதுகாப்பு என்பதனை வாகனப் பாதுகாப்பு என மாற்றுங்கள் என பரிந்துரை செய்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X