2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'வயோதிபர்கள் அரசியல்வாதிகள்: இளைஞர்கள் பயங்கரவாதிகள்'

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'இந்நாட்டின் வயோதிப ஆண்கள் அரசியல்வாதிகளாகவும் இளைஞர்கள் யுவதிகள், பயங்கரவாதிகளாகவுமே சித்தரிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தலைமுறை இடைவெளி, இல்லாமல் செய்யப்படல் வேண்டும் என்று, யாழ். மாவட்டச் செயலகத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற நல்லிணக்கப் பொறிமுறைக்காக மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வின் போது, பெண்ணொருவர் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அப்பெண், மேலும் கூறியதாவது,

'அரசியலில் பெண்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள். அரசியலில் இளைஞர் - யுவதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படல் வேண்டும். இளைஞர்கள், பெண்கள், வயோதிபர்களுக்கு என்ன தேவை என்பதனையும் இந்த வயோதிப அரசியல்வாதிகளே தீர்மானிக்கின்றார்கள். இவ்வாறான பேராசை பிடித்த வயோதிப ஆண் அரசியல்வாதிகளாலேயே, நாட்டில் பேரழிவு ஏற்பட்டது. எனவே, வயோதிபர்களிடமுள்ள அரசியல் பலம், இளைஞர்களின் கைகளுக்கு மாற வேண்டும். அதற்கு அரசியலில் மாற்றம் ஏற்படவேண்டும்.

பெரும்பான்மை பற்றி கதைக்கின்றார்கள். நாட்டில் 53.3 வீதம் பெண்களே உள்ளனர். பெண்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு வேண்டும் என இப்போது தான் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். பெரும்பான்மை பற்றி கதைப்பவர்கள், நாட்டில் 53.3 பெண்கள் இருப்பதனால், பெண்களே பெரும்பான்மை என அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை கையளித்து இருக்கலாமே.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தமிழர்களுடன் பேச வேண்டும். முஸ்லிம் மக்களின் பிரச்சனையை தீர்க்க முஸ்லிம் மக்களுடன் பேச வேண்டும். தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் முஸ்லிம்களுடன் பேசிப் பயனில்லை. தாஜூதினின் வழக்கு விசாரணைகளுக்காக தேடி தேடி சாட்சி ஆதாரங்களை திரட்டுபவர்கள். ஏன் தமிழ் மக்களுக்கு எதிரான எந்த ஒரு குற்றத்துககாகவும் இவ்வாறு செயற்படவில்லை' என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X