2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வயோதிபரை தண்ணீர் ஊற்றி கலைத்த கடைக்காரர்

Niroshini   / 2016 ஒக்டோபர் 20 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், காங்சேன்துறை வீதியில் உணவகம் ஒன்றின் முன்னால் உட்கார்ந்திருந்த வயோதிபர் ஒருவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை, அந்த இடத்திலிருந்து கலைத்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (20) இடம்பெற்றுள்ளது.

மேற்படி வயோதிபர் நடக்க முடியாத காரணத்தால், கடைகளுக்கு முன்னால் அமர்ந்திருப்பதை வழமையாகக் கொண்டிருப்பார். மேலும், கடைகளில் கொடுக்கப்படும் உணவுகளை உண்டு வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், கே.கே.எஸ். வீதியில் இவர் இருக்கும் போது, அந்தக் கடையில் பணியாற்றும் பணியாளர், அவர் மீது நீரை ஊற்றியுள்ளார். அது சாதாரண நீரா அல்லது கொதிநீரா என்பது தெரியவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X