2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

15 வயது சிறுமி துஷ்பிரயோகம்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 17 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

ஊர்காவற்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் பாடசாலை செல்லும் 15 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், நேற்று சனிக்கிழமை (16) முறைப்பாடு செய்துள்ளனர் என ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கோப்பாய்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவர், அல்லைப்பிட்டிப் பகுதியிலுள்ள உறவினர்கள் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த காலங்களில் அதே பகுதியினைச் சேர்ந்த குறித்த சிறுமியுடன் காதல் தொடர்பினை மேற்கொண்டிருந்தார்.

சிறுமியின் வீட்டில் நேற்று சனிக்கிழமை (15) யாரும் இல்லாத நேரம் பார்த்து வந்தவர் சிறுமியுடன் நீண்டநேரம் பேசியுள்ளார்.

பின்னர் தன்னுடன் அழைத்துச் சென்று உறவினர் வீட்டில் இரவு தங்க வைத்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திவிட்டு மறுநாள் அதிகாலை 03 மணிளவில் சிறுமியினை வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளார்.

இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறுமியை மீட்ட பொலிஸார், சட்ட வைத்திய அதிகாரியின் முன் ஆஜர் செய்து வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இளைஞனைக் கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X