2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

20 வருடங்களின் பின் அபிவிருத்திச் சங்க கட்டடம் புனரமைப்பு

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

கிராமத்துக்கு ஒரு மில்லியன் நிதியுதவித் திட்டத்தின் கீழ், வலி. தென்மேற்கு பிரதேசத்தின் ஜே-129 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட, சேதமடைந்த நிலையிலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குச் சொந்தமான கட்டடம் புனரமைக்கப்படவுள்ளது.

சுதுமலை அம்பாள் ஆலயத்துக்கு முன்பாக அமைந்துள்ள கிராம அபிவிருத்திச் சங்கத்துக்குச்  சொந்தமான இக்கட்டடத்தில், கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் நீதிமன்றமும் தெங்கு, பனம்பொருள் உற்பத்தி விற்பனை கூட்டுறவுச் சங்கத்தின் பனங்கட்டித் தொழிற்சாலையும் இயங்கி வந்தன.

போர்க்காலச் சூழ்நிலையைத் தொடர்ந்து சேதமடைந்த நிலையிலிருந்த இக்கட்டடத்தில் இராணுவ முகாமும் இயங்கி வந்தது. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கூரையின்றி இடித்த சுவர்களுடன் உள்ள இக்கட்டடத்தை புனரமைப்பதற்கு பல தடவைகள் முயற்சி எடுத்துக்கொண்ட போதிலும், அரசாங்கத்தினால் நிதி வழங்கப்படாமையினால் புனரமைக்கப்படாமல் காலம் கடத்தப்பட்டு வந்தது.

இதையடுத்து பல வருடங்களாக மேற்படி சங்கத்தின் நிர்வாகம் இயங்காமல் முடக்கப்பட்டிருந்தது. காலத்துக்கு காலம், இச்சங்கத்தை இயக்குவதற்காக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பல தடவைகள் முயன்ற போதும் எவரும் முன்வரவில்லை.
 
இந்நிலையில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராமத்திற்கு ஒரு மில்லியன் நிதி உதவித் திட்டத்தின் கீழ் மேற்படி சங்கத்தைப் புனரமைப்பதற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் நிதி ஓதுக்கியுள்ளமையைத் தொடர்ந்து, கட்டடத்தின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X