2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

13 வர்த்தகர்களுக்கு அபராதம்

Niroshini   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் நியதிகளை மீறி பொருட்களை விற்பனை செய்த 13 வர்த்தகர்களுக்கு 14,500 ரூபாய் அபராதம் விதித்து, மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ரீ.கருணாகரன், புதன்கிழமை (10) தீர்ப்பளித்ததாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் தனசேகரம் வசந்தசேகரம் இன்று வியாழக்கிழமை (11) தெரிவித்தார்.

அதிகார சபை அதிகாரிகள் மல்லாகம் நீதிமன்ற எல்லைக்குள் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களைச் சோதனை, நியதிகளை மீறிய 13 வர்த்தகர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

காலாவதியான மலிகைப் பொருட்களை விற்பனை செய்த 10 வர்த்தகர்களுக்கு தலா 1,000 ரூபாயும் காலாவதியான மென்பானம் விற்பனை செய்த வர்த்தகருக்கு 1,500 ரூபாயும் காலாவதியான கிருமிநாசினியை விற்பனை செய்த மருந்துக்கடை உரிமையாளருக்கு 1,500 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டதாக இணைப்பாளர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X