2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வீதியில் கைவிடப்பட்ட ஆண்குழந்தை மீட்பு

Super User   / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (சரண்யா)

யாழ்ப்பாணம் கொக்குவில் சம்பியன் வீதியில் அநாதரவாகக் கைவிடப்பட்ட நிலையில், பிறந்து ஒரு நாளேயான ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணியளவில் உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில் இப்பகுதியில் இச்சிசு காணப்பட்டுள்ளது.

இவ்வீதியால் சென்றவர்கள் குழந்தையின் அழுகைக் குரல் கேட்டு பார்த்தபோது சிசு கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் ,அப்பகுதிக் கிராம சேவகருக்கு அறிவித்ததை அடுத்து கிராம சேவகர், பொலிஸார் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சிசுவை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X